Representative Image.
இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார், இந்த சதத்தின் சச்சினின் ஒரு சாதனையை கோலி முறியடித்தார்.இந்த நிகழ்வை அடுத்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கம்பீர் தெரிவித்துள்ளார் அது இணையத்தில் பரவி வருகிறது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அசத்தல் நாயகன் விராட் கோலி ஒருநாள் தொடரில் தனது 45-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.இந்த போட்டிக்கு முன்னர் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் கோலி 8 சதங்களுடன் முதலில் இடத்தில் இருந்தனர், தற்போது கோலி 9 சதங்களுடன் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு சென்றார்.
அதேபோல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார், விராட் கோலி இன்னும் 5 சதங்கள் அடித்தால் அந்த சாதனையையும் முறியடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கோலியின் சாதனையை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்விற்கு எப்போதும் போல் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார் கவுதம் கம்பீர், அதில் விராட் கோலி இன்னும் எத்தனை சாதனைகளை செய்தாலும் எத்தனை சதங்கள் அடித்தாலும் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக வர முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி திறமையான வீரர் தான் அதிக சாதனைகள் படைப்பார் உண்மை தான், ஆனால் அவர் சச்சினுக்கு இணையாக வர முடியாது ஏனென்றால் அன்றைய கால கட்டம், கிரிக்கெட் விதிமுறைகள் எல்லாம் வேறு இன்றைய கிரிக்கெட் உடன் அதை ஒப்பிட முடியாது .
அதற்கு கம்பீர் கூறிய சில காரணங்கள் அப்பொழுது போட்டியில் 30 யார்டு வட்டத்திற்குள் 5 வீரர்கள் நிறுத்தப்படவில்லை, மேலும் அன்றைய கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் ஒரு புதிய பந்தை தான் பயன்படுத்த முடியும், ஆனால் இப்பொழுது 2 புதிய பந்துகள் பயன் படுத்துகிறார்கள்.
இதனால் சச்சின் விளையாடிய காலகட்டத்தையும் கோலி விளையாடும் காலகட்டத்தையும் ஒப்பிட முடியாது என்று பதிவு செய்தார் கவுதம் கம்பீர், இவரது கருத்தை ஒரு சில ரசிகர்கள் ஏற்றுள்ளனர் ஆனால் பலர் ஒருவர் சாதனை படைத்தால் பாராட்ட வேண்டும் அதை விட்டுவிட்டு தேவை இல்லாமல் விமர்சிக்க கூடாது என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.