ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் மிக சிறந்த கேப்டன்..!! கம்பீர் புகழாரம்..!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய விழாவில், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பற்றி தனது கருத்தை பதிவு செய்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் செயல்பட்டு வருகிறார், முதல் முறையாக பங்கேற்கும் தொடரில் பிளே ஆப் சுற்று வரை முன்னேறி அசத்தியது. தற்போது 2023 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் 2வது முறையாக களமிறங்க உள்ள லக்னோ அணி புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தியது.
இந்த நிகழ்வில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர்கள், முன்னணி வீரர்கள், கேப்டன் கே.எல்.ராகுல், ஆலோசகர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அப்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று லக்னோ அணியின் ஆலோசகராக 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை புகழ்ந்து பேசினார்.
அதாவது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் போன்ற வீரர் கிடைத்தது மிகப்பெரிய விஷயம் என்று கம்பீர் கூறினார், மேலும் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை சிறப்பாக வழிநடத்தினர். அதே சமயத்தில் ராகுல் ஒரு போட்டியை அணுகும் விதம் மற்றும் கேப்டனாக செயல்படும் ஆற்றல் போன்றவை தான் விளையாடிய காலத்தில் தனக்கு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருப்பேன் என்று கவுதம் கம்பீர் கூறினார்.
தற்போதைய நிலையில் மிகவும் மோசமான பார்ம் மூலம் பல விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ள கே.எல்.ராகுலை கவுதம் கம்பீர் பாராட்டி உள்ளது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது, இதனை பார்த்த கே.எல் ராகுல் ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் ரசிகர்கள் விரைவாக ராகுல் தனது பழைய பார்முக்கு திரும்ப வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் லக்னோவில் ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.