Representative Image.
ENG vs PAK 1st Test : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 657 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, பாகிஸ்தானின் பந்துவீச்சை சுற்றிச் சுழன்று சிதறடித்தது. அவர்களின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் விரைவான சதங்களை அடித்து நொறுக்கினர்.
போட்டியின் தொடக்க நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பின்னர் 506-4 ரன்களில் இன்று மீண்டும் இரண்டாவது நாளைத் தொடங்கியது. பாகிஸ்தான் அணிக்காக நசீம் ஷா (3-140) ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசினாலும், இங்கிலாந்து பேட்டர்கள் அசுர வேகத்தில் ஸ்கோரைத் தொடர்ந்தனர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 18 பந்துகளில் 41 ரன்களுக்குப் பிறகு வீழ்ந்தார் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் தனது முதல் டெஸ்டில் 9 ரன்களை எடுத்தார். ஆனால் பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கை (153) பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை.
இறுதியில் இங்கிலாந்து 101 ஓவர்களில் 657 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ஜாஹிட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், 33 ஓவர்களில் 235 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இது எந்தவொரு அறிமுக டெஸ்ட் வீரரை விட அதிகம்.
இதற்கிடையே 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் தனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து, முல்தான் மற்றும் கராச்சியிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.