இளம் படையை உருவாக்கத் திட்டம் டிராவிட் அதிரடி ..! இனி டி20 போட்டியில் நோ ரோஹித்,கோலி ..??

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 07, 2023 & 10:16 [IST]

Share

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறார்கள்,இந்த தொடரில்  இளம் வீரர்கள் படை கொண்டு இந்திய அணி களமிறங்கியுள்ளது.இதற்கான முழு விளக்கத்தை  இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் அண்மையில் அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய அணி மும்பையில் நடந்த முதல் டி-20 போட்டியில் இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றது,அடுத்து புனேவில் நடத்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் பௌலிங் மற்றும் பேட்டிங்கில் சற்று சொதப்பியதால் தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி பல விமர்சனங்களுக்கு ஆளானது.

இலங்கை எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து பௌலர் அர்ஷ்தீப் சிங் எதிர்பாராத விதமாக தொடர்ந்து மூன்று நோ பால் வீசினார்.அதன் பின் அணியின் மற்ற இரு இளம் பௌலர்களான உம்ரான் மாலிக் மற்றும் சிவம் மாவி தலா ஒரு நோ பாலை வீசினார்கள்.

இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அணியின் வீரர்களை ரன்களை அடித்து குவித்தனர்,இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர்களான  இஷான் கிசான் ,கில் மற்றும் ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள், மேலும்  இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியையும் தழுவியது.

இதனால் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் இந்திய அணியின் மீது வந்து குவிந்தது.இந்த விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியது இலங்கைக்கு எதிரான தொடரில் உள்ள இந்திய அணியில் ஒரு சில வீரர்களை தவிர அனைவரும் அனுபவமில்லாத  இளம் வீரர்கள் தான்,எனவே அவர்கள் தவறு செய்வது இயல்பு தான்.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பையை மனதில் வைத்து தான் ஒரு இளம் இந்திய அணியை உருவாக்கும் நோக்கில் இளம் வீரர்கள் கொண்ட அணியை வைத்து வர விருக்குக்கும்  அனைத்து டி20 தொடரிலும்  இந்தியா பங்கேற்க உள்ளது என்று கூறினார்.

இந்த தொடரில் உள்ள வீரர்கள் ஒரு சில போட்டிகளில் தான் விளையாடிய உள்ளார்கள்,அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் மேலும் இனி வரவிருக்கும் அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தான் பங்கேற்கும் என்று டிராவிட் கூறினார்.

டிராவிட் கூறிய இந்த கருத்து இணையத்தில் பரவலாக பரவியது, அதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இவர்   கூறுவதை பார்த்தால் இனி இந்திய அணியில் அனுபவ வீரர்களான ரோஹித்,கோலி ,ராகுல் ஆகியோருக்கு இடம் கிடைக்காது என்பதை தான் டிராவிட் நாசுக்காக கூறியுள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர்.