IND VS AUS TEST 2023 : இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா..!! தினேஷ் கார்த்திக் புகழாரம்..!!

இந்திய அணி நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது, இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியை சிறப்பான முறையில் வழி நடத்தி தனது பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா வை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய காரணம் என்று கூறினால் மிகையில்லை, முதல் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரன்கள் எடுக்க தவறிய நிலையில் காப்பானாக செயல்பட்டு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித் சர்மா, மேலும் இந்திய அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வை முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து வரும் நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் குறித்து கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் ரோஹித் சர்மா அனைத்து வடிவ தொடர்களிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.
மேலும் ரோஹித் சர்மா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார், தற்போது சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தனது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
டெஸ்ட் தொடரில் அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா அதிக சராசரி (57.65) வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அண்மையில் அடித்த சதம் மூலம் ரோஹித் சர்மா அனைத்து வடிவ தொடர்களிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்று வரலாற்றை படைத்ததன் மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளார் என்று கூறினார்.
இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 120(212) ரன்கள் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு உதவிய நிலையில், அடுத்து டெல்லியில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றியை நோக்கி வழிநடத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.