தமிழ் படத்தை தயாரிக்கும் எம்.எஸ்.தோனி..! மிகுந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஓய்விற்கு பிறகு பல நிறுவனங்களில் முதலீடு செய்து அசத்தி வருகிறார்.அந்த வகையில் “தோனி என்டேர்டைன்மெண்ட்” என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.அதில் முதல் பட தயாரிப்பாக தமிழ் நடிகர்களை வைத்து தமிழ் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் முக்கியமானவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்கு கேப்டனாக பணியாற்றி நாட்களில் தோனி அணிக்காக பல வெற்றிகளையும் அனைத்து ஐசிசி தொடர்களின் கோப்பைகளையும் பெற்று தந்தவர், இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி பல அவதாரங்கள் எடுத்து புதிய தொழில்களை செய்து வருகிறார்.
தோனி குறிப்பாக “தோனி என்டேர்டைன்மெண்ட்” பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து உள்ளார், அதில் தயாரிப்பாளராக தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் பட தயாரிப்பை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தோனி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் முதல் தயாரிப்பாக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தமிழ் முன்னணி நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் லவ் டுடே படத்தில் நடித்து பிரபலமான இவானா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார், மேலும் இந்த படத்திற்கு லெட்ஸ் கெட் மேரி டு (Lets Get Married) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
எம்.எஸ்.தோனிக்கு தமிழ் மக்கள் மீதும் தமிழ் ரசிகர்கள் மீதும் பெரிய அன்பு உள்ளது என்று பலமுறை கூறியுள்ளார், அதை நிரூபிக்கும் வகையில் தனது முதல் பட தயாரிப்பை தமிழ் படத்தை வைத்து ஆரம்பிக்க உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தமிழ் அளிப்பதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.