ஐ.பி.எல் 2023: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் அதிரடியான பிளேயிங்-11 .? இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு ..!

ஐ.பி.எல் மினி ஏலத்தில் பங்கேற்ற டெல்லி கேபிட்டல்ஸ் ஏற்கனவே அணியில் திறமையான வீரர்களை தக்க வைத்துள்ளதால்,மீதம் இருக்கும் 5-இடங்களுக்கு நிரப்பினால் போதும் என்ற நோக்கில் ஒரு சில முன்னனி வீரர்களை குறி வைத்து மட்டுமே வாங்க முற்ப்பட்டது.
அதே போல் சரியான நேரத்தில் செயல்பட்டு அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக ரிலீ ரோசோவ் மட்டும் மணீஷ் பாண்டே ஆகியரை வாங்கியது,அதன்பின் அணியின் பேக்கப் விக்கெட் கீப்பர் இடத்திற்கு சாதுரியமாக இங்கிலாந்தின் பில் சால்ட்டை வாங்கியது.
இந்த ஐ.பி.எல் தொடரில் உள்ள அணிகளில் சிறந்த பௌலிங் யூனிட்டை வைத்திருக்கும் டெல்லி அணி அதை மேலும் வலுப்படுத்தும் விதமாகபௌலர்கள் முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரை வாங்கியது.இதனை பார்க்கும் பொழுது டெல்லி அணி வெறும் பேக் கப் பிளேயர்களை வாங்கவே ஏலத்தில் கலந்து கொண்டது என்பது தான் உண்மை.
டெல்லி அணி கடந்த ஆண்டு நடத்த தொடரில் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்தனர்,அதனை கருத்தில் கொண்டே ஒரு சில வீரர்களை தவிர அனைவரையும் அப்படியே அணியில் தக்கவைத்துக் கொண்டது டெல்லி அணி நிர்வாகம்.
ஐ.பி.எல் 2023 ஆம் தொடரில் டெல்லி அணி சார்பில் களத்தில் விளையாட வாய்ப்புள்ள முக்கிய 11-வீரர்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.அந்த பிளேயிங் 11-ல் உள்ள வீரர்களை பார்க்கும் பொழுது டெல்லி அணி மிகவும் பலமான அணியாக தெரிகிறது.
டெல்லி அணியின் தோராயமான பிளேயிங்-11 குறித்த விவரங்கள் : ப்ரித்வி ஷா,டேவிட் வார்னர்,மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன்), ரிலீ ரோசோவ்,மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், கலீல் அகமது, சேத்தன் சகாரியா.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
விக்கெட்கீப்பர்கள் : ரிஷப் பந்த் (கேப்டன்),பில் சால்ட் (இங்கி).
பேட்ஸ்மேன்கள் : யாஷ் துல், சர்பராஸ் கான்,ரோவ்மேன் பவல் (மேற்.தீவுகள்),ப்ரித்வி ஷா,டேவிட் வார்னர் (ஆஸி), ரிலீ ரோசோவ் (தெ.ஆ), மணீஷ் பாண்டே.
ஆல்ரவுண்டர்கள் : லலித் யாதவ், மிட்செல் மார்ஷ்(ஆஸி),அக்சர் படேல்,ரிப்பல் படேல்,விக்கி ஓஸ்ட்வால்.
பௌலர்கள் : கலீல் அகமது, அமன் ஹக்கீம் கான், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்), கமலேஷ் நாகர்கோடி, லுங்கி என்கிடி (தென்.ஆ), அன்ரிச் நார்ட்ஜே (தென்.ஆ),சேத்தன் சகாரியா, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா.