WPL 2023 : ஆரம்பமே அதிரடி காட்டிய டெல்லி கேபிட்டல்ஸ்.!! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சறுக்கல்..!!

இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி மாபெரும் வெற்றி பெற்று அசத்தியது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் ஆடவர் பிரீமியர் லீக் தொடரை மிஞ்சும் அளவிற்கு தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் அதிரடியான தொடக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணி வீராங்கனைகள் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் மெக் லானிங் 72(43) ரன்களும் ஷாபாலி வர்மா 84 (45) ரன்களும் பெற்று ஆட்டமிழந்தார்கள், அதன்பின் வந்த வீராங்கனைகளும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் பதிவு செய்தார்கள்.இந்நிலையில் 224 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் இடது கை பவுலர் தாரா நோரிஸ் தனது பவுலிங்கில் சிதறடித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீராங்கனைகள் இறுதி வரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் மட்டுமே பெற்றனர், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பவுலர் தாரா நோரிஸ் சிறப்பாக பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளை பெற்று அசத்தினார்.
இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 60 வது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது, மேலும் சிறப்பாக பவுலிங் செய்து அணியின் வெற்றிக்கு உதவி மகளிர் பிரீமியர் தொடரில் முதல் 5 விக்கெட்டுகள் பெற்ற பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆன தாரா நோரிஸ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஆரம்ப போட்டிகளே அதிரடியாக தொடங்கிய நிலையில் ஆடவர் பிரீமியர் லீக் தொடருக்கு இணையாக விரைவில் பல ரசிகர்களை கவர்ந்து வரலாற்றில் முக்கிய தொடராக விளங்கும் என்று கிரிக்கெட் நிபுணர்களும் ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.