ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு புதிய கேப்டன், துணை கேப்டன் அறிவிப்பு…!! ரசிகர்கள் ஆரவாரம்..!!

ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் படையை கொண்ட முக்கிய அணியாக கலக்கி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம், இந்த ஐபிஎல் தொடரில் பழைய கேப்டன் ரிஷாப் பந்த் பங்கேற்க முடியாத நிலையில் அணியின் புதிய கேப்டனாக முன்னணி வெளிநாட்டு வீரர் செயல்பட உள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பந்த் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய நிலையில் காயம் அடைந்து ஓய்வில் உள்ளார், காயம் முழுமையாக குணமாக பல மாதம் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரில் பந்த் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதையடுத்து டெல்லி அணியை யார் வழிநடத்த போகிறார் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் புதிய கேப்டனை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி அணியை வழிநடத்த ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை டேவிட் வார்னர் கேப்டனாக வழிநடத்திய போது, அந்த அணிக்கு முதல் சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் மற்றும் துணை கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் செயல்படுவார்கள் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்நிலையில் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி டேவிட் வார்னர் தலைமையில் பங்கேற்கும் என்று அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள், மேலும் இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.