ஐபிஎல் 2023 : ரிஷப் பந்த் எனது அருகில் இருந்தால் போதும்…! டெல்லி பயிற்சியாளர் பாண்டிங் நெகிழ்ச்சி பதிவு..!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரை காண ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, குறிப்பாக தனித்தனியாக ஒவ்வொரு அணிகளுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அது குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக விளங்கும் ரிஷப் பந்த் அண்மையில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பந்த் முழுமையாக குணமாகி வர 4-6 மாதங்கள் ஆகும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரிஷப் பந்த் இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று டெல்லி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் அணியின் கேப்டன் விக்கெட் கீப்பர் இடத்திற்கு தகுதியான ஒரு வீரரை டெல்லி நிர்வாகம் நியமிக்க பரிசீலித்து வருகிறது.
ரிஷப் பந்த் வரும் ஐபில் தொடரில் பங்கேற்க முடியாத நிலை குறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒரு கோரிக்கையை ஐபிஎல் நிர்வாகத்திடம் வைத்துள்ளார்.அதில் ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஐபில் தொடருக்கு முன் அவர் உடலில் உள்ள காயங்கள் சற்று குணமாகி விட்டால் அவரை டெல்லி அணியுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த பதிவு குறித்து பேசிய பாண்டிங் பந்த் டெல்லி அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டாலும்,அவர் எங்கள் அருகில் இருந்தால் எங்களுக்கு பலம் தான் என்றார்.மேலும் பந்த் அணியின் சிறந்த கேப்டன் அவரின் புன்னகை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற விஷயங்கள் அணி வீரர்களுக்கு பலமாக அமையும் என்று கூறினார்.
இதனால் பந்த் உடல்நிலை பயணிக்கும் நிலைக்கு வந்து விட்டால் அவர் எங்கள் அருகில் இருந்தால் போதும் என்று ரிக்கி பாண்டிங் நெகிழ்ச்சியான கருத்தை பதிவு செய்தார்.இந்த பதிவை பார்த்த பந்த் ரசிகர்கள் உட்பட பலர் அவர் நலமுடன் குணமாகி சீக்கிரம் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று பாண்டிங் கருத்துக்கு ஆதரவாக தங்களின் கருத்தையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.