WOMEN’S T20 WORLD CUP 2023 : உலக கோப்பை அரங்கில் புதிய சாதனையை படைத்தார் தீப்தி சர்மா..!! குவியும் பாராட்டுகள்..!!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை லீக் சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் விளையாடினார்கள், இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா புதிய சாதனை படைத்து வரலாற்றில் இடம் பிடித்தார்.
இந்திய அணிக்காக தொடர்ந்து டி20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, நேற்றைய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், குறிப்பாக ஸ்டாஃபானி டெய்லர் மற்றும் ஷெமைன் காம்பெல்லே ஆகியோரின் விக்கெட்களை முதலில் பெற்றார்.
அதன்பின் அஃபி பிளெட்சர் உடைய விக்கெட்டை பெற்ற பொழுது சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்தார், இந்திய அணியின் பூனம் யாதவ்(98), ராதா யாதவ் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில் முதல் இந்திய வீராங்கனையாக அணியின் ஆப் ஸ்பின்னர் தீப்தி சர்மா இந்த சாதனையை முதலில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆடவர் அணியில் டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 91 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இளம் வயதில் புதிய மைல்கல்லை எட்டிய தீப்தி சர்மாவை கிரிக்கெட் ரசிகர்கள் நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.