பரபரப்பு.. இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியிடம் பண மோசடி செய்து கொலை மிரட்டல்!
Written by Mugunthan Velumani
- Updated on :

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா பரத்வாஜிடம், தொழில் செய்யலாம் என்ற போர்வையில் 10 லட்சம் ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சாஹர், ஆக்ராவின் ஹரி பர்வத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முதன்மை சந்தேக நபர்கள் துருவ் மற்றும் கமலேஷ் பரீக், அக்டோபர் 7, 2022 அன்று, தங்களிடம் 10 லட்சத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஜோடி, வேகப்பந்து வீச்சாளரின் குடும்பத்தினரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதுடன், பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
30 வயதான தீபக் சாஹர் இந்திய அணிக்காக 24 டி20 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இதுவரை ஏழு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.