டேவிட் வார்னர் தனது 100-வது டெஸ்டில் அசத்தல் சாதனை..! பல தரப்பிலிருந்து குவியும் பாராட்டுகள்..!

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் தனது 100-டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார், சமீப காலமாக சரியான பார்மில் வார்னர் இல்லாததால் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இவரது இடம் குறித்த பல கேள்விகள் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது,இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
இவரது சமீபத்திய பார்ம் குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் இந்த போட்டியில் வார்னர் மீது பல எதிர்பார்ப்புகள் எழுந்தது.
இந்த போட்டியில் முதல் நாளில் தென்னாபிரிக்கா அணி 189-ரன்களுக்கு ஆட்டமிழந்தது,அதனை அடுத்து களமிறங்க ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அசதலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16-பவுண்டரிகள் மற்றும் 2-சிக்ஸர்கள் உட்பட 254 பந்துகளில் 200 ரன்களை அடித்து இரட்டை சதத்தை தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பதிவு செய்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தை தொடர்ந்து தனது 100-வது டெஸ்டில் சதம் அடித்த முன்னால் வீரர் ரிக்கி பாண்டிங்வுடன் அந்த பட்டியலில் சேர்ந்தார்,அடுத்தாக தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் தனது 3-வது இரட்டை சதத்தை டெஸ்ட் அரங்கில் பதிவு செய்தார்.
இதுவரை தனது 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மட்டுமே பெற்றிருந்தார்,இப்பொழுது டேவிட் வார்னரும் அந்த பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னர் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறப்பான சம்பவத்தை செய்தாக அவரது ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இவர் 200 ரன்களை அடித்த சில நிமிடத்தில் ரிடையர் ஹுர்ட் ஆகி ஆட்டத்திலிருந்து வெளியேறினர்,இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 386-3 என்ற நிலையில் 197 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.