ஐபிஎல் 2023 : சென்னை அணியின் பிளேயிங் 11 இது தான்.. வெளியானது பட்டியல்?

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023 ஏலத்தில் ஏழு வீரர்களை வாங்கியது மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டரும் டெஸ்ட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸுக்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மூன்றாவது-மிக விலையுயர்ந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் மற்றும் அஜய் மண்டல், பகத் வர்மா மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறாத வீரர்களை உள்ளடக்கிய ஆல்-ரவுண்டர்களை வாங்குவதில் கவனம் செலுத்தியது. மேலும் இந்தியாவின் மூத்த பேட்டர் அஜிங்க்யா ரஹானேவையும் வாங்கியுள்ளது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோராயமான பிளேயிங் 11 குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் (தோராயமாக): டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், எம்எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா.
சிஎஸ்கே ஐபிஎல் 2023 அணி வீரர்கள்
விக்கெட் கீப்பர்கள்: எம்எஸ் தோனி, டெவோன் கான்வே (நியூஸி).
பேட்ஸ்மேன்கள்: ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே.
ஆல்-ரவுண்டர்கள்: மொயின் அலி (இங்கி), சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிரிட்டோரியஸ் (தெ.ஆ.), மிட்செல் சான்ட்னர் (நியூஸி), பென் ஸ்டோக்ஸ் (இங்கி), கைல் ஜேமிசன் (நியூஸி), அஜய் மண்டல், பகத் வர்மா, நிஷாந்த் சிந்து.
பந்துவீச்சாளர்கள்: தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா (இலங்கை), சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா (இலங்கை).