ஐபிஎல் 2023 : தோனி பயிற்சியில் சிக்ஸர் மழை !! ரசிகர்கள் மகிழ்ச்சி..!! | ms dhoni csk 2023

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சியில் பல சிக்ஸர்கள் அடித்து பந்துகளை பறக்கவிட்ட காணொளி இணையத்தில் வெளியான நிலையில், மிகுந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் விரைவில் மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பம் ஆகா உள்ள நிலையில், தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகள் தங்கள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கி விட்டார்கள். இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஹாம் கிரௌன்டு ஆன சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கேப்டன் எம்.எஸ்.தோனி வேகப்பந்து மற்றும் ஸ்பின் பவுலர்கள் வீசிய பந்தில் சிக்ஸர்கள் அடிக்கும் காணொளி இணையத்தில் வெளியான நிலையில் சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அந்த காணொளியை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை அணி மோசமான தோல்வியுடன் வெளியேறிய நிலையில் இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சி செய்வார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக உள்ள கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சென்னை அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்று அணியின் நாயகன் தோனிக்கு மறக்க முடியாத சிறந்த கடைசி போட்டியை அளிப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.