சிஎஸ்ஏ டி20 லீக்கில் நல்லா ஆடறாரே.. ரிஷப் பண்டிற்கு பதிலா இவரை போடுங்க.. டெல்லி அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!!

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, 2023 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பிற்கு ரிஷப் பண்டிற்கு பதிலாக பில் சால்ட் பொருத்தமானவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி, பண்ட் ஐபிஎல் 2023க்குள் தயாராகி வர முடியாது என்று கூறினார். கடந்த ஆண்டு விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகு அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஐபிஎல் டெல்லி உரிமையாளரால் பில் சால்ட் அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் தற்போது நடந்து வரும் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிராக பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிக்காக சால்ட் 47 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த பிறகு பிரக்யான் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
சால்ட்டின் சிறப்பான ஆட்டம் காரணமாக, பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் சன்ரைசர்ஸை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. இதன் மூலம் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் சிஎஸ்ஏ டி20 2023 புள்ளிகள் பட்டியலில் +1.150 என்ற நிகர ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.