IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டிக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்..!! புதிய சாதனைகளுக்கு வாய்ப்பு..!! ஆர்வத்தில் ரசிகர்கள்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வரும் நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த போட்டிகளில் இரு அணிகள் சார்பில் பல சாதனைகள் பதிவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, எனவே 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் அதேபோல் இந்திய அணி 2 வது வெற்றியை பதிவு செய்ய முயலும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள 2 வது டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை அரங்கேற உள்ளது குறிப்பிடதக்கது, அவை முறையே
1) இந்திய அணிக்காக முதல் போட்டியில் அசத்தல் பௌலிங்கை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டியில் இன்னும் 1 விக்கெட் எடுத்தால் டெஸ்ட் அரங்கில் வேகமாக 250 விக்கெட்டுகள் பெற்ற 5 வது இந்தியர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
2) அதேபோல் தனது 62 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள ஜடேஜா இன்னும் 1 விக்கெட்டை கைப்பற்றினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 2000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் பெற்ற 2வது இந்தியர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த பட்டியலில் 51 போட்டிகளில் இந்த சாதனையை படைத்த அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார்.
3) இந்திய அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் டெஸ்ட் போட்டியில் இன்னும் 1 விக்கெட் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் வேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்தியர் என்ற சாதனையை படைப்பார், இதில் 9 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை பெற்று அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4) இந்திய அணியின் முன்னணி பவுலர் அஸ்வின் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால், இந்திய மண்ணில் அணில் கும்ப்ளே 25 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி படைத்துள்ள சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
5) ஆஸ்திரேலியா அணியின் முன்னணி ஸ்பின் பௌலர் நாதன் லியோன் 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை பெற்றால் பார்டர் கவாஸ்கர் தொடரில் 100 விக்கெட்டுகளை பெற்ற ஆஸ்திரேலியா வீரர் என்ற மகத்தான சாதனையை படைப்பார்.
6) ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் இன்னும் 73 ரன்கள் பெற்றால் ஏ பி டி வில்லியர்ஸ் (8765 ) மாற்றும் வி வி எஸ் லக்ஷ்மணன் ஆகிய இருவரையும் கடந்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் பெற்றுள்ள டாப் 20 வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7) இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடினால் , இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
8) இந்திய அணியின் அடுத்த டிராவிட் என்று புகழப்படும் புஜாரா 2வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்களை பெற்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2000 ரன்களை பெற்ற 4வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இத்தனை சாதனைகள் அரங்கேற வாய்ப்புள்ளதால், இந்த டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.