மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடரும் சோதனை..! 17.5 கோடி கொடுத்து வாங்கியது ஒரு குற்றமா..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 03, 2023 & 14:38 [IST]

Share

ஐ.பி.எல் மினி ஏலத்தில் மும்பை அணி சார்பில் 17.5 கோடிக்கு வாங்கிய  ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் அண்மையில் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார்.அவர் சீக்கிரமாக குணமாக வேண்டும் மும்பை அணி சோகத்தில் இருக்கும் நிலையில் இப்பொழுது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.   

ஐ.பி.எல் மினி ஏலம் அண்மையில் கொச்சியில் சிறப்பாக நடந்து முடிந்தது,அதில் கலந்து கொண்ட 10-அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை கொட்டி வாங்கினார்கள்,அதே போல் மும்பை அணியால் வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் அணிக்கு பலம் சேர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற கேமரூன் கிரீனிற்கு கையில் காயம் ஏற்பட்டது, இதனால் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார்.மும்பை அணியின் ரசிகர்கள் நிர்வாகம் என அனைவரும் அவர் சீக்கிரமாக குணமாக வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்பின் அவர் நன்றாக குணமாகி விட்டார் பிப்ரவரி மாதத்தில்  ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் விளையாடும் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது,அதன் பின் கூடுதல் தகவலாக கேமெரூன் கிரீன் ஐ.பி.எல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பந்து வீசமாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தங்களின் பிளேயர்களின் பணிச்சுமையை கண்காணித்து அவர்களுக்கு சரியான இடைவெளியில் ஓய்வெடுக்க அறிவுறுத்தி வருவது வழக்கம், அந்த வகையில் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாட போகிறார் அந்த தொடர் முடிய மார்ச்-13 ஆம் தேதி ஆகும்.அதன் பின் 4 வாரங்களுக்கு அவர் பந்து வீச கூடாது என்று கூறியுள்ளார் 

அதன்படி ஏப்ரல்-13-ஆம் தேதி வரை ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக அவர் பந்து வீச மாட்டார் என்பது உறுதி, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தங்களின் பிளேயர்களின் ஓய்வு குறித்த தகவல்களை முன்னதாகவே ஐ.பி.எல் நிர்வாகத்திடம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி தற்போது பௌலிங் யூனிட்டில் மிகவும் உறுதியான அணி என்பதால் அவர்களுக்கு இது பெரிய பதிப்பாக இருக்காது என்று கருதினாலும், அதிக விலைக்கு ஆல்ரவுண்டர் ரோலுக்காக வாங்கினால் இப்படி நடக்கிறது என்று ரசிகர்கள் இணையத்தில் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்