ஐ.பி.எல் 2023 : “நான் இன்னும் அந்த தகுதியை அடையவில்லை” ஏலத்தில் அதிகவிலைக்கு போன இளம் ஆல்ரௌண்டரின் பதிவு..!

ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் கொச்சியில் சிறப்பாக நடந்துமுடிந்தது,அனைத்து அணிகளும் போட்டிபோட்டு வெளிநாட்டு ஆல்ரௌண்டர்களை வாங்க முற்பட்டார்கள்,மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் 17.5 கோடிக்கு இளம் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வாங்கப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் பொல்லார்டு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்,அதனை தொடர்ந்து அணியில் அவருடைய இடத்தை நிரப்ப ஏலத்தில் ஒரு அதிரடி வீரரை வாங்க முடிவு செய்தது மும்பை அணி .
இந்நிலையில் போட்டிபோட்டு ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்கியது,இவருக்காக கொடுக்கப்பட்ட விலை ஏலத்தில் இரண்டாவது அதிகமான விலையாகும்.இவர் ஒரு பௌலிங் ஆல்ரவுண்டர் அதே நேரத்தில் அதிரடி பேட்டிங்கையும் வெளிப்படும் திறன் கொண்டவர் எனவே இவரை குறிவைத்து வாங்கியது மும்பை நிர்வாகம்.
கேமரூன் கிரீன் தனது முதல் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில்,பல கோடிகள் கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்டை பற்றி அவரிடம் கேட்ட பொழுது,நான் முதல் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவே பதிவு செய்தேன் .இந்த அளவிற்கு அதிக தொகைக்கு போவேன் என்று நான் நினைக்கவே இல்லை.
அதேபோல் நான் அந்த வேலைக்கு செல்லும் அளவிற்கு இன்னும் எதுவும் செய்யவில்லை,இதனால் எனது நிலையிலும் ஆட்டத்திலும் எந்த பாதிப்பும் மாற்றமும் இருக்காது நான் நம்பிக்கையோடு இருக்கிறான் சிறப்பான பங்களிப்பையும் அளிப்பேன் என்று கூறினார்.
மேலும் ஆல்ரவுண்டராக இருக்கும் வீரர் தனது பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் அப்பொழுது தான் போட்டியில் சிறப்பாக பங்காற்ற முடியும் என்று கூறினார்.
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் ஐந்து விக்கெட்களை கைப்பற்றி ஒரு அரைசதமும் அடித்துள்ளார் , இதனால் மும்பை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.