Representative Image.
கிரிக்கெட் விளையாட்டில் ஐபில் தொடருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு, இந்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு அணி வீரர்களும் ஆர்வமாக இருப்பார்கள். இந்திய வீரர்கள் பலருக்கு இந்திய அணியில் இடம்பெறவும் தங்கள் திறமையை நிரூபிக்கவும் இந்த தொடர் மிகவும் உதவியுள்ளது. மேலும் வெளிநாட்டு அணி வீரர்களுக்கும் தங்கள் திறமையை வளர்த்திக்கொள்ளும் இடமாகவும் இந்த தொடர் அமைந்துள்ளது என்று கூறினால் மிகையில்லை.
அடுத்த வருடத்திற்கான ஐபில் போட்டிக்காக வீரர்களை எடுக்கும் மினி ஏலம் டிசம்பரில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்கள் அணிக்கு புதிய வீரர்களை வாங்குவதில் ஆர்வமாக உள்ளார்கள். இதனால் ஏலத்தில் பங்கேற்கும் பல புதிய வீரர்களை வாங்கப் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா இளம் வீரர் "கேமரூன் கிரீன்" இந்த ஏலத்தில் பங்கேற்பதாகச் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் இந்த வருடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது திறமையான ஆட்டம் தங்களுக்கு மிகுந்த வலுசேர்க்கும் என்று அறிந்த பல அணிகளும் அவருக்காக போட்டிப்போடுவார்கள். அதனால் அவர் வரும் ஐபில் ஏலத்தில் அதிக விலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஷஸ் தொடர் வருவதால், பல ஆஸ்திரேலியா வீரர்கள் இந்த ஐபில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் "கேமரூன் கிரீன்" தனது வருகையை உறுதி செய்துள்ளார்.
அடுத்த ஆண்டிற்கான ஐபில் மினி ஏலம் பெங்களூரில் நடக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து அணிகளில் ரீ-டெயின் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபில் நிர்வாகம் வெளியிட்டது. ஐபில் போட்டியைப் போலவே தங்கள் அணி எந்த வீரர்களை எடுக்கும் என்று ஏலத்தை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் .