இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் விலகல்..! சோகத்தில் ஆஸ்திரேலியா அணி.!

இந்திய மண்ணில் நடக்க முக்கிய டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் டிராபி, இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிகள் பொறுத்து தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்பை உறுதியாகும் என்பதால் இந்த தொடரின் ஆர்வம் ரசிகர்கள் இடையில் மிகவும் அதிகமாக உள்ளது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாட உள்ளார்கள். இந்த தொடருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் இந்திய அணி கட்டாய வெற்றிகளை நோக்கி தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து பௌலர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு முன்னதாகவே வெளியானது, இதனைதொடர்ந்து அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து பௌலர் ஜோஷ் ஹேஸில்வுட் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய ஹேஸில்வுட், "கடந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமாகாததால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியவில்லை, மேலும் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி சிறிய இடைவேளையில் நடைபெற உள்ளது. அதற்கு முன் முழு உடல் தகுதி அடைந்து விடுவேன் என்று நம்புகிறேன். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து காண்போம்." என்றார்.
மேலும் காயத்தினால் ஏற்படும் பிரச்சனைகளால் ஒரு டெஸ்ட் தொடரில் முழுமையாக அனைத்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை மிகவும் விரக்தியை ஏற்படுத்துகிறது என்று கூறினார். ஹேஸில்வுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி சார்பாக இரண்டு வேகப்பந்து பௌலர்கள் காயத்தினால் விலகியுள்ள நிலையில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலந்து ஆகியோர் வேகப்பந்து பௌலர்கள் இடத்தில் களத்தில் பங்கேற்பார்கள், இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை எந்த அணி கைப்பற்றும் என்று அறிய
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியம் என்பதால் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்காத நிலை இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை சற்று அதிகப்படுத்தும் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலான கருத்தாக பதிவாகி உள்ளது.