பிக்பாஷ் லீக் 2022-2023: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி..! ஜே ரிச்சர்ட்சன் வேகத்தில் சாய்ந்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 30, 2022 & 11:30 [IST]

Share

ஆஸ்திரேலியாவின் முக்கிய டி-20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 20-வது போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பெர்த் மைதானத்தில் மோதினார்கள்,இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆடம் ஜம்பா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோ கிளார்க் மற்றும் தாமஸ் ரோஜர்ஸ் சுமாரான தொடக்கத்தை அளித்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் வெப்ஸ்டர் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார் மேலும் அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அட்டமிழந்தார்கள்.

இறுதியாக 20-ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 135 ரன்களை பதிவு செய்தது,அதிகபட்சமாக கார்ட்ரைட் 36(32) ரன்களை அடித்தார்.பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சார்பில் ஜே ரிச்சர்ட்சன் 4-விக்கெட்களை எடுத்து அசத்தினார்.  

அதன் பின் 136-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தொடக்க வீரர்களில் ஒருவரான ஃபாஃப் டு பிளெசிஸ் 3(5) ரன்களில் ஆட்டமிழக்க,சற்று நிதானமாக விளையாடிய மற்றொரு வீரரான ஆடம் லித் 35(30) ரன்களை அடித்து தனது விக்கெட் இழந்தார்.

அடுத்தாக களத்தில் இறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க,அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் 53(26) ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இறுதியாக 17.3 ஓவர்களில் 136 ரன்களை அடித்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

மேலும் சிறப்பாக பந்து வீசி 4-விக்கெட்களை கைப்பற்றிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் ஜே ரிச்சர்ட்சன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தை பிடித்தது.