பிக்பாஷ் 2022-2023 : டாம் ரோஜர்ஸ் வேகத்தில் சிதறியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்..! மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி..!
ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் பிக்பாஷ் லீகில் இன்றைய 27-வது போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள்.இதில் முதலில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் கேப்டன் ஆடம் ஜம்பா பௌலிங்கை தேர்வு செய்தார்.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான சாம் ஹார்பர் டக் அவுட் ஆனார்,மற்றொரு வீரரான குப்டில் 32(27) அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் பின்ச் உட்பட அனுபவ வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதனால் 20-ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 141 ரன்களை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது.அதன் பின் இரண்டாவது பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் வீரர்கள் எதிரணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் உடனுக்குடன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள்.
இறுதிவரை அவுட் ஆகாமல் விளையாடிய அணியின் அனுபவ நிக் லார்கின் 48(40) ரன்களை அடித்து களத்தில் இருந்தார்,மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20-ஓவர்கள் முடிவில் 108 ரன்களை மட்டுமே எடுத்தது,எனவே இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 33 ரன்களில் வெற்றி அடைந்தது.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் சார்பில் சிறப்பாக பௌலிங் செய்து 5 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்த டாம் ரோஜர்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.இந்த வெற்றியின் மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் ரன்ரேட் ஏறி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.