பிக்பாஷ் 2022-2023 : சாம் ஹார்ப்பர் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் கலக்கல் வெற்றி ..!

ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு தொடர்களில் மிகவும் பிரபலமான தொடரான பிக்பாஷ் லீக் 32-வது போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மெல்போர்னில் உள்ள டாக்லாண்ட்ஸ் மைதானத்தில் மோதினார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பௌலிங்கை தேர்வு செய்தார்.இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் காலேப் ஜூவல் மற்றும் பென் மெக்டெர்மாட் அதிரடியான தொடக்கத்தை தந்து தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய அணியின் வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் உடனுக்குடன் அவுட் ஆனார்கள்,இறுதியாக 20-ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 162 ரன்களை பதிவு செய்தது.
அடுத்தாக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் மிரட்டலான தொடக்கத்தை அளித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் பின்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்த நிலையில்,அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் ஹார்ப்பர் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 7-சிக்ஸர்கள், 4-பௌண்டரிகள் உட்பட 89 ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் மீதம் இருந்த சொற்ப ரன்களை அடித்த நிலையில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 18.1 ஓவரில் இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்காக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் ஹார்ப்பர் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.