Representative Image.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீகின் இன்றைய 26-வது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும்ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் ஹோபார்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் மோதினார்கள். அந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டன் பீட்டர் சிடில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஒருவரான ஹென்றி ஹன்ட் 3(10) ரன்களில் ஆட்டமிழக்க,சற்று நிதானமாக விளையாடிய மத்தேயு ஷார்ட் 38(26) ரன்களில் ஆட்டமிழந்தார்.அதன்பின் அணியின் அனுபவ வீரரான கிறிஸ் லின் ஒரு புறம் அதிரடியாக விளையாட,அணியின் மற்ற வீரர்கள் எல்லாம் ஒரு புறம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
இந்நிலையில் இறுதிவரை நின்று சற்று அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் லின் 87(58) அடித்து அவுட் ஆனார்,இவரின் முயற்சியால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20-ஓவர்கள் முடிவில் 177 ரன்களை பதிவு செய்தது.
அதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினார்கள் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் காலேப் ஜூவல் மற்றும் பென் மெக்டெர்மாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் எதிரணியின் பௌலிங்கை சிதறடித்து அசத்தல் ஆட்டத்தின் மூலம் அரைசதம் கடந்தனர்,பின்பு காலேப் ஜூவல் 54(28) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஆடம் ஹோஸ் 9(9) ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பென் மெக்டெர்மாடும் 53(33) ரன்களில் ஆட்டமிழந்தார்.அதன்பின் ஜோடி சேர்ந்த டி ஆர்சி ஷார்ட் மற்றும் டிம் டேவிட் இருவரும் பொறுப்பாக விளையாடி 17.2 ஓவர்களில் 178 ரன்களை அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய காலேப் ஜூவல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்த ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 6-வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.