Representative Image.
Bigbash League 2022-23 : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் பிக்பாஷ் லீகின் சீசன்-12இன் 4-வது போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் மேத்யூ வேட் முதலில் பந்து வீச்சை தேர்வுச் செய்தார். எனவே மெல்போர்ன் ஸ்டார்ஸ் சார்பில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர்கள் ஜோ கிளார்க் மற்றும் தாமஸ் ரோஜர்ஸ் நிதானமாக விளையாடத் தொடங்கினார்கள். தாமஸ் ரோஜர்ஸ்போட்டியில் 20(13) ரன்களை எடுத்த நிலையில் ஷதாப் கான் சூழலில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ,அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் 101*(66) இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி சதம் அடித்தார். அதில் 9-பௌண்டரிகளும் ,6-சிக்ஸர்களும் அடங்கும். இந்நிலையில் 20-ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 183 பதிவு செய்தது.
அடுத்தாக 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மெக்டெர்மாட் 17(11) ரன்களிலும் ,டி ஆர்சி ஷார்ட் 15(15) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அதன்பின் நிதானமாக விளையாடிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் 35(35) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், அடுத்தாக பேட்டிங் செய்ய வந்த வீரர்களும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் உடனுக்குடன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். எனவே 20-ஓவர்கள் முடிவில்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 38 ரன்களில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் ஆடம் ஜம்பா மற்றும் லூக் வூட் தலா 3 -விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்குப் பக்க பலமாக இருந்தார்கள்.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக சதம் அடித்த ஜோ கிளார்க் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.