இந்திய அணிக்கான தேர்வு முறையில் மாற்றம்.! உள்நாட்டு தொடர்களுக்கு முக்கியத்துவம்..! பி.சி.சி.ஐ அதிரடி முடிவு ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 02, 2023 & 14:31 [IST]

Share

இந்திய கிரிக்கெட் அணிக்கு இனி பழைய நடைமுறையில் வீரர்களை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ முடிவு, ஐ.பி.எல் தொடருக்கான முக்கியத்துவத்தை குறைத்து உள்நாட்டு தொடர்களில் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் சில முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பி.சி.சி.ஐ நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று முக்கிய உறுப்பினர்களான பி.சி.சி.ஐ யின் தலைவர் ரோஜர் பின்னி,நேஷனல் கிரிக்கெட் அகாடமி தலைவர் லக்ஷ்மானன்,தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா,இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உட்பட பலர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட்  அணியின்  எதிர்கால திட்டம் குறித்த பல முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் வரும்  ஒருநாள் உலகக்கோப்பை,டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் அடுத்த 2024-ஆம் ஆண்டில் நடக்க விருக்கும் டி-20 உலகக்கோப்பை தொடர் என பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை கடந்த சில வருடங்களாக  ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜொலிக்கும்  வீரர்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யும் நடைமுறை இருந்தது,ஆனால் அந்த வீரர்கள் பெரிய அளவில் சர்வதேச போட்டிகளில் தங்களின் திறமை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.

இதனால் 2008-ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்திய வீரர்களை தேர்வு செய்த நடைமுறையை இனி பின்பற்றப் போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுவரை ஐ.பி.எல் தொடர்களின் பங்களிப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர்கள் சாகர்,வருண் சக்ரவர்த்தி,ஷுவம் துபே, தேவ்தட் படிக்கல்,வெங்கடேஷ் ஐயர்,ஆவேஷ் கான் உள்ளிட்ட வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்திய உள்நாட்டு தொடர்களான ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்று திட்டவட்டமாக பி.சி.சி.ஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.   

அதேபோல் இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் பார்ம் அவுட் ஆகி அணியில் இடம்பெறாமல் போனால்,அதன் பின் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி தங்களின் திறனை வெளிப்படுத்திய பிறகே மீண்டும் அணியில் இடம்பெற முடியும் என்றும் பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.         

அடுத்தாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பணிச்சுமையை சரியான முறையில் கண்காணித்து அதற்கு ஏற்றார் போல் கூடுதல் போட்டிகளில் பங்கேற்கும் படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிய வந்தள்ளது.

மேலும் குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை  அவர்களின் பணிசுமையின் அளவின்படி முக்கிய போட்டிகளில் மட்டும் களமிறக்க வேண்டும் என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படும்  என்றும்  முடிவெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பி.சி.சி.ஐ  நிர்வாக தலைவர் ரோஜர் பின்னி தான் இந்த பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலிறுத்தியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறையின் மூலம் இந்திய அணிக்கு தேர்வாக விரும்பும் வீரர்கள் தங்களின் முழு  திறனையும் உள்நாட்டு தொடர்களில் நிரூபிப்பார்கள்,மேலும் சர்வதேச போட்டிகளிலும் அதே திறனை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.