Representative Image.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து இந்திய அணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வுக் குழுவை கலைத்ததை தொடர்ந்து இது வந்துள்ளது.
முன்னதாக, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நீக்கப்பட்டது மற்றும் ஐந்து தேர்வாளர் பதவிகளுக்கான புதிய நபர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.