மீண்டும் யோ-யோ டெஸ்ட்,புதிதாக டெக்ஸா டெஸ்ட் பிளேயர்கள் தேர்வில் அறிமுகம்..! பி.சி.சி.ஐ அதிரடி..!

இந்திய கிரிக்கெட் அணியின் 2023-ஆம் புதிய வருடத்திற்கான திட்டத்தை வகுக்க பி.சி.சி.ஐ நிர்வாக குழு தலைமையில் முக்கிய உறுப்பினர்கள் கலந்த கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 1-ஆம் தேதி நடத்தப்பட்டது,அதில் முக்கிய முடிவாக பிளேயர்களின் உடல் தகுதியை முடிவு செய்ய புதிய சோதனைகளை அறிமுகப்படுத்த முடிவாகி உள்ளது.
பி.சி.சி.ஐ நிர்வாக குழு கூட்டத்தில் தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா,பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, என்.சி.ஏ தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் இந்திய அணியின் பிளேயர்கள் தேர்வுமுறை,உடல் தகுதிகான தேர்வுகள் எனப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக விலகும் பிளேயர்கள் மீண்டும் அணியில் இடம்பெற வேண்டும் என்றால் யோ-யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா டெஸ்ட் (உடல் எலும்பு ஸ்கேன் ) உள்ளிட்ட டெஸ்ட்களில் கண்டிப்பாகத் தேர்வாக வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த பொழுது யோ-யோ டெஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த யோ-யோ டெஸ்டில் பிளேயர்கள் தேர்வானால் மட்டும் தான் அணியில் இடம்பெற முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதன்பின் கொரோனா கால பேரிடரால் இந்த முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பி.சி.சி.ஐ உயர்மட்ட உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பிறகு இனி இந்திய அணிக்கு பிளேயர்கள் தேர்வு முறையில் யோ-யோ டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்பின் புதிதாக டெக்ஸா டெஸ்ட் என்ற புதிய முறையும் பிளேயர்களின் உடல் தகுதியை முடிவு செய்யக் கட்டாய தேர்வாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
டெக்ஸா டெஸ்ட் என்றால் உடலில் உள்ள எலும்புகளை முழுமையாக ஸ்கேன் செய்யும் முறை,இதன் மூலம் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் பிளேயர் மீண்டும் அணியில் இடம்பெற வரும் பொழுது அவரது காயம் முழுமையாகக் குணமாகி விட்டதா என்று அறிந்து கொள்ளலாம்.
இதனால் காயம் முழுமையாகக் குணமாகாமல் எந்த பிளேயரும் அணியில் இடம்பெற முடியாது, மேலும் பிளேயர்களின் முழு உடலையும் ஸ்கேன் செய்து எலும்பில் தன்மையைக் கண்டறிந்து,முன் கூட்டியே காயம் ஏற்பட வாய்ப்புள்ள வீரர்களை ஓய்வு பெறச் செய்யலாம்.அதனால் பிளேயர்களுக்கு பெரிய காயம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
மேலும் ஒரு பிளேயர் காயம் காரணமாக ஓய்வில் சென்ற பிறகு அணிக்குத் திரும்பும் பொழுது யோ-யோ டெஸ்ட் மட்டும் இல்லாமல் டெக்ஸா டெஸ்டிலும் தேர்வான பிறகே அணியில் இடம்பெற முடியும் என்று பி.சி.சி.ஐ திட்டவட்டமாகத் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.