இந்திய அணியை தேர்ந்தெடுக்க புதிய தேர்வுக்குழு.. பிசிசிஐ தகவல்?

Representative Image. Representative Image.

By Sekar Published: December 30, 2022 & 19:28 [IST]

Share

அசோக் மல்ஹோத்ரா தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) மூத்த தேசிய தேர்வுக் குழுவுக்கான நேர்காணலை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, சிஏசி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அதிகாரிகளை இன்று சந்தித்து நேர்காணல் செயல்முறை குறித்து விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.

பிசிசிஐ தேர்வுக் குழுவிற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் வெளியிட்டது மற்றும் பல விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே மற்றும் சுலக்ஷனா நாயக்  பிசிசிஐ தலைமையகத்தில் அலுவலகப் பொறுப்பாளர்களுடன் முறையான அறிமுகம் மற்றும் தேர்வு செயல்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வது பற்றி விவாதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், சுப்ரோடோ பானர்ஜி, ஷிவ் சுந்தர் தாஸ் உள்ளிட்ட பலரும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர், அதே நேரத்தில் சமீபத்தில் கலைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் தலைவர் சேத்தன் சர்மா மற்றும் குழு உறுப்பினர் ஹர்விந்தர் சிங் ஆகியோரும் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.