ரஞ்சி டிராபி 2022-2023: பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி முடிவு..! ரஞ்சி டிராபியில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள்..!

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 20, 2022 & 18:00 [IST]

Share

இந்திய மண்ணில் நடக்கும் உள்நாட்டுத் தொடர்களில் முக்கிய முதல் தர கிரிக்கெட் தொடராகக் கருதப்படும் ரஞ்சி டிராபியின் இந்த வருடத்திற்கான போட்டியில் முதல் சுற்றுகள் முடிந்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாவது சுற்றில் அணிகள் பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் புதிய பி.சி.சி.ஐ தலைவராகப் பதவியேற்றுள்ள ரோஜர் பின்னி தலைமையிலான நிர்வாக குழு இந்திய அணியில் இடம்பெற்று தற்போது ஓய்வில் இருக்கும் இந்திய வீரர்களை ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க வலியுறுத்தி உள்ளனர்.

பி.சி.சி.ஐ நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு முக்கிய காரணமாக அறியப்படுவது இந்திய அணியில் இடம் பெற்று சர்வதேச தொடர்களில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்கும் இந்திய வீரர்கள் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்பதன் மூலம் தங்களின் ஆட்டத்தின் திறனை மேம்படுத்தலாம். அதே வேளையில் இந்திய அணிக்குத் தேவைப்படும் பொழுது முழு திறனுடன் இருக்க உள்நாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று  என்றும் கூறியுள்ளனர்.

மேலும் மூன்று தர கிரிக்கெட் தொடரிலும் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் தான் ஓய்வில் இருக்கவேண்டும். மற்ற வீரர்கள் உள்நாட்டுத் தொடர்களில் கண்டிப்பாக பங்கேற வேண்டும் பி.சி.சி.ஐ நிர்வாகம் கூறியுள்ளது. இதன்மூலம் இந்திய வீரர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி தங்களின் ஆட்டத்தின் திறனை மேம்படுத்தி  இந்திய அணிக்குத் தேவைப்படும் பொழுது சர்வதேச தொடர்களில் பங்கேற்கலாம் என்றும் பி.சி.சி.ஐ நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த ரஞ்சி டிராபி தொடரில் முதலிலிருந்தே இந்திய அணியின் முன்னனி வீரர்கள் இஷாந்த் சர்மா மற்றும் அஜிங்க்யா ரஹானே தங்களின் மாநில அணிக்காக விளையாடிவரும் நிலையில், அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் தங்கள் மாநில அணிக்காக விளையாடி வருகிறார்கள். பி.சி.சி.ஐ நிர்வாகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்றில் தங்கள் மாநில அணிக்காக  விளையாட முன் வந்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பெற்று ரஞ்சி டிராபியில் விளையாடும் வீரர்கள் பட்டியல்

வீரர்கள்

மாநில அணி

ஹனுமா விஹாரி

ஆந்திரா

இஷாந்த் சர்மா

டெல்லி

யுஸ்வேந்திர சாஹல்

ஹரியானா

மயங்க் அகர்வால்

கர்நாடகா

சூர்யகுமார் யாதவ்

மும்பை

அஜிங்க்யா ரஹானே

மும்பை

விருத்திமான் சாஹா

திரிபுரா

சஞ்சு சாம்சன்

கேரளா

இஷான் கிஷன்

ஜார்கண்ட்