2023-ல் இந்திய அணி விளையாட உள்ள கிரிக்கெட் தொடர்களின் முழு விவரங்கள்… பிசிசிஐ அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் அணி 2022 ஆண்டிற்கான கடைசி தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற நிலையில் இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வியைத் தழுவியது. மேலும் இன்னும் வங்கதேச அணிக்கு எதிராக 2-டெஸ்ட் போட்டிகள் கொண்டு தொடரை இந்திய அணி விளையாடி முடித்தால் இந்த ஆண்டிற்கான அனைத்து தொடர்களும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2022-ஆம் வருடம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்திய அணி தனது கடைசி தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய அணிக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்திலேயே தென்னாப்பிரிக்கா அணியுடன் ஒருநாள் தொடரை இழந்தது. பிறகு இங்கிலாந்து அணியுடன் ஒரு முக்கிய டெஸ்ட் போட்டியை இழந்து தொடரைச் சமன் செய்தது. ஆசியக்கோப்பைத் தோல்வி, மோசமான தோல்வியுடன் டி-20 உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது மற்றும் கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது. இந்த ஆண்டு முழுவதுமே இந்திய அணிக்குச் சற்று மோசமாகத் தான் அமைந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு 2023-ல் இந்திய அணிக்குச் சிறந்த ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன், இந்திய அணி விளையாட உள்ள ஒருநாள் ,டி-20 மற்றும் டெஸ்ட் என அனைத்து தொடர்களின் விவரங்களையும் பி.சி.சி.ஐ நிர்வாகம் வெளியிட்டது.
1.ஜனவரி 2023 இந்தியா vs இலங்கை போட்டி
இந்த வருடம் 2023 ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை அணி இந்தியா வந்து மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது.
தேதி |
போட்டிகள் |
இடம் |
---|---|---|
ஜனவரி 3 2023 |
1-டி 20 போட்டி |
மும்பை |
ஜனவரி 5 2023 |
2-டி 20 போட்டி |
பூனே |
ஜனவரி 7 2023 |
3-டி 20 போட்டி |
ராஜ்கோட் |
ஜனவரி 10 2023 |
1-ஒருநாள் போட்டி |
கவுகாத்தி |
ஜனவரி 12 2023 |
2-ஒருநாள் போட்டி |
கொல்கத்தா |
ஜனவரி 15 2023 |
3-ஒருநாள் போட்டி |
திருவனந்தபுரம் |
2.ஜனவரி- பிப்ரவரி 2023 நடக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டிகள்
இலங்கை அணிக்கு எதிரான தொடர்கள் முடிந்தவுடனே இந்தியா வரும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
தேதி |
போட்டிகள் |
இடம் |
---|---|---|
ஜனவரி 18 2023 |
1-ஒருநாள் போட்டி |
ஹைதராபாத் |
ஜனவரி 21 2023 |
2-ஒருநாள் போட்டி |
ராய்ப்பூர் |
ஜனவரி 24 2023 |
3-ஒருநாள் போட்டி |
இண்டோர் |
ஜனவரி 27 2023 |
1-டி 20 போட்டி |
ராஞ்சி |
ஜனவரி 29 2023 |
2-டி 20 போட்டி |
லக்னோ |
பிப்ரவரி 1 2023 |
3-டி 20 போட்டி |
அகமதாபாத் |
3.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டிகள் (பிப்ரவரி-மார்ச் 2023)
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்த பிறகு இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் அந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேதி |
போட்டிகள் |
இடம் |
---|---|---|
பிப்ரவரி (9-13) 2023 |
1- டெஸ்ட் போட்டி |
நாக்பூர் |
பிப்ரவரி (17-21) 2023 |
2- டெஸ்ட் போட்டி |
டெல்லி |
மார்ச் (1-5) 2023 |
3- டெஸ்ட் போட்டி |
தர்மசாலா |
மார்ச் (9-13) 2023 |
4- டெஸ்ட் போட்டி |
அகமதாபாத் |
மார்ச் 17 2023 |
1-ஒருநாள் போட்டி |
மும்பை |
மார்ச் 19 2023 |
2-ஒருநாள் போட்டி |
விசாகப்பட்டணம் |
மார்ச் 22 2023 |
3-ஒருநாள் போட்டி |
சென்னை |
4. ஐ.பி.எல் போட்டிகள் (மார்ச் -மே 2023)
இந்த வரிசையில் அடுத்தாக 2023 ஆண்டிற்கான 16-வது ஐ.பி.எல் தொடர் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்க உள்ள நிலையில் அனைத்து இந்திய வீரர்கள் மற்றும் ஐ.பி.எல் போட்டியில் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ளுவார்கள்,எனவே அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்திய அணி எந்த ஐ.சி.சி தொடரிலும் விளையாடாது என்பது குறிப்பிடத்தக்கது.
5. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடைய போட்டிகள் (ஜூலை-ஆகஸ்ட் 2023)
இந்தியா 2023-ஆம் ஆண்டில் முதல் வெளிநாட்டுப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் சென்று அந்த அணிக்கு எதிராகப் பல வடிவத் தொடரில் மூன்று ஒரு நாள்போட்டிகள் ,டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
6.ஆசியக்கோப்பை 2023 (செப்டம்பர் 2023)
ஆசியா அணிகள் மற்றும் பங்குபெறும் போட்டியான ஆசியக்கோப்பைத் தொடர் இந்தமுறை பாகிஸ்தான் நாட்டில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்பது குறித்து எந்த முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை ,மேலும் இந்த தொடரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டும் பங்கேற்கும் வகையில் புதிய இடத்தை ஐ.சி.சி அறிவிக்குமா என்று நாம் பொறுத்திருந்து காண்போம்.
7.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் (செப்டம்பர் 2023)
இந்தியா தேசம் வரும் ஆஸ்திரேலியா அணி 2023-னில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சியெடுக்கும் விதமாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
8.ஒருநாள் உலகக்கோப்பை 2023 (அக்டோபர்-நவம்பர் 2023)
2023-ஆண்டில் இந்தியாவில் 50-ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடக்கவுள்ளது,இந்த உலகக்கோப்பை இந்திய அணி கண்டிப்பாகக் கைப்பற்றி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் (நவம்பர் - டிசம்பர் 2023)
ஒரு உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர்,ஆஸ்திரேலியா அணி மூன்றாவது முறையாக இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
10.இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர் (டிசம்பர் 2023 -ஜனவரி 2024)
2023-ஆம் ஆண்டின் கடைசி தொடராக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று அந்த அணிக்கு எதிராக அனைத்து வித போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாட உள்ளது,அதில் 2-டெஸ்ட் போட்டிகள் ,3-ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.