இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல்..! பிசிசிஐ அறிவிப்பு..!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட காயத்தால் பல மாதங்கள் ஓய்வு பிறகு இலங்கை எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளார் என்று பிசிசிஐ அண்மையில் அறிவித்தது,ஆனால் நாளை (10.1.2023) முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ள நிலையில் பும்ரா தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இந்திய அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 என்ற நிலையில் தொடரை வென்றது,அதன்பின் நாளை ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கி விளையாட உள்ளது.
இந்த அணியில் ஓய்வில் இருந்த முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் விளையாட உள்ளதால் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்ததாக தெரிந்தது.
இந்திய அணியின் சிறந்த முன்னணி பவுலரான பும்ரா கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காயத்தினால் இந்திய அணியில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார்,அதனால் அவர் டி20 உலக கோப்பையில் பங்கு பெற முடியாமல் போனது அது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருந்தது என்று சொல்லலாம், மேலும் அந்த தொடரில் தோல்வியுற்று இந்திய அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல மாதங்கள் ஓய்விற்கு பிறகு ஜஸ்பிரிட் பும்ரா இலங்கை எதிரான தொடரில் பங்கேற்பார் என்று பிசிசிஐ அறிவித்தது, அவரது வருகை இந்திய அணிக்கு நல்ல பலமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் நினைத்து மகிழ்ந்தார்கள்.
மேலும் நாளை இந்திய அணி கௌஹாத்தியில் இலங்கை அணியை முதல் ஒருநாள் போட்டியில் சந்திக்க உள்ள நிலையில், பிசிசிஐ நிர்வாகம் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அதில் ஜஸ்பிரிட் பும்ரா இலங்கை எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறியுள்ளது.
பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில் உடனடியாக தொடரில் களமிறக்கி அவசரப்படுத்த வேண்டாம் என்று தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிவுறுத்தலின் பேரில், மேலும் அடுத்தாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடர்,ஒருநாள் உலக கோப்பை உள்ளிட்ட தொடர்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்காக அடுத்து வரும் நியூசிலாந்து தொடரில் பும்ரா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பும்ராவை தவிர ஓய்வில் இருந்த அனைத்து முன்னணி வீரர்களும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியா ஒருநாள் தொடர் அணி (அப்டேட் செய்யப்பட்ட) : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (து.கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.