பிக்பாஷ் 2022-2023: மைக்கேல் நேசர் பிடித்த வினோதமான கேட்ச்..! ஆட்டத்தின் போக்கையும் மாற்றி குழப்பத்தையும் ஏற்படுத்தியது..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 02, 2023 & 15:30 [IST]

Share

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீகின் 25-வது போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதினார்கள்,அதில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் மைக்கேல் நேசர் பிடித்த அசத்தலான கேட்ச் ரசிகர்கள்,கிரிக்கெட் நிபுணர்கள் என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட்  அணி 20-ஓவர்கள் முடிவில் 224 ரன்களை அடித்து அசத்தியது.அதனை அடுத்து 225-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றியை ஒரு அசத்தலான கேட்ச் மூலம் மாற்றி அமைத்தார் பிரிஸ்பேன் ஹீட் அணியின் வீரர் மைக்கேல் நேசர்.

இரண்டாவது பேட்டிங் செய்ய களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியினர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.குறிப்பாக ஜோர்டான் சில்க் என்று வீரர் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 3-பௌண்டரிகள்,2-சிக்ஸர்கள் உட்பட 41(23) அடித்து அசத்தி கொண்டிருந்தார்.

அப்பொழுது 18.2 ஓவரில் ஸ்டெக்டீ வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க தூக்கி அடித்தார்  ஜோர்டான் சில்க்,அந்த பந்தை பௌண்டரி அருகில் இருந்த பிரிஸ்பேன் ஹீட் அணியின் மைக்கேல் நேசர் பிடித்தார்.

அதன்பின் தடுமாறிய அவர் பௌண்டரி லைனை தாண்டும் பொழுது பந்தை தூக்கிப்போட்டார் அப்பொழுது பந்தும்  பௌண்டரி லைனை தாண்டி சென்றது,பிறகு பௌண்டரி எல்லைக்குள் இருந்த வாரே குதித்து கால் தரையில் படாமல் மீண்டும் பந்தை பிடித்து பௌண்டரி எல்லைக்கு முன் வீசி அவரும் உள்ளே வந்து அதை பிடித்தார்.

அந்த நேரத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள், போட்டியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் முன்னனி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் உட்பட பல கிரிக்கெட் நிபுணர்களும் அதிர்ச்சியில் குழப்பத்திலும் மூழ்கினார்கள்.

அதன்பின் மைதானத்தில் இருந்த நடுவர்கள் அந்த கேட்ச்சை உறுதி படுத்தி அவுட் கொடுத்தார்கள்,இது  மைக்கேல் நேசரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டாலும்,பல கிரிக்கெட் வல்லுநர்களாலும் நிபுணர்களாலும் மிகமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

மைக்கேல் நேசர் பிடித்த அந்த கேட்ச் அவரது அணிக்கு மிகவும் உதவியது,மேலும் போட்டியின் நிலையே தலைகீழாக மாறி 15-ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.