இறுதி வரை போராடிய ராஜஸ்தான்...பரபரப்பிற்கு பஞ்சமில்லை...பெங்களூர் வெற்றி! | IPL 2023 RCB vs RR Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 32 வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் சாதுர்யமான பந்து வீச்சில் சிக்காமல் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து விளையாட வந்தனர் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் யாஷ்சவி கைஸ்வால், ஜோஸ் பட்லர். இதில் முதல் ஓவரில் ஜோஸ் பட்லர் முகமத் சிராஜின் பந்து வீச்சில் மாட்டிக்கொண்டு அவுட் ஆகினார். அதற்கு பின்னர் தேவ்தட் படிக்கல், யாஷ்சவிக்கு உறுதுணையாக விளையாட ஆரம்பித்தார். இருவரும் பொறுப்புடன் விளையாட ஆரம்பித்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பால் ராஜஸ்தான் அணிக்கு 100 ரன்கள் கிடைத்து வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
இவர்களின் ஆட்டத்தால் பெங்களூர் அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் 11 வது ஓவரில் டேவிட் வில்லியின் பந்து வீச்சில் அவுட் ஆகினார் தேவ்தட் படிக்கல் (52). இவரின் விக்கெட் இழப்பு ராஜஸ்தான் அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஓவர்களில் யாஷ்சவி கைஸ்வால் (47) மற்றும் சஞ்சு சைமன் (22) இருவரும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து போட்டியின் தலையெழுத்தை மாற்ற துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர் ஆகியோர் விளையாட ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் 17 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி.
ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷிம்ரோன் ஹெட்மியர் ரன் அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் இறங்கினார். தற்போது ராஜஸ்தான் அணியின் வெற்றி அஸ்வின் மற்றும் துருவ் ஜூரல் கையில் உள்ளது. எனவே, இருவரும் பொறுமையாக விளையாட ஆரம்பித்தனர். அஸ்வின் தனக்கு வரும் பந்துகளை சிங்கிள்ஸ் அடித்து துருவ் ஜூரலை விளையாட அனுமதிக்கிறார். அடுத்தடுத்து பந்துகளில் இருவரும் மாறி மாறி பௌண்டரி அடித்து ஆட்டத்தின் நிலையை அருமையாக மாற்றினர்.
இறுதி ஓவரில் ஆட்டம் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும். ஹர்ஷத் படேல் இறுதி ஓவர் பந்து வீச்சு ராஜஸ்தான் அணியை கதிகலங்க வைத்தது. அந்நிலையில் அஸ்வின் அவர்கள் அவுட் ஆகிவிட்டார். இறுதியாக ராஜஸ்தான் அணியில் இருந்து அப்துல் பாசித் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் இன்னும் இரண்டு பந்துகள் இருந்த நிலையில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதி வரை போராடி 20 ஓவர் முடிவில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிப் பெற்று விட்டது.