தோனி,ஜடேஜா வழியில் அக்சர் பட்டேல் புதிய சாதனை ..! ரசிகர்கள் கொண்டாட்டம்…!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 07, 2023 & 11:08 [IST]

Share

இந்திய மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வரும் டி20 போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் தனது அசாத்திய ஆட்டத்தினால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்,இவர் 2-வது டி20 போட்டியில் தோனி ஜடேஜா உள்ளிட்ட வீரர்களை பின் தள்ளி புதிய சாதனையும்  படைத்துள்ளார்.

இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அக்சர் பட்டேல் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார்,அடுத்து அதிரடி வீரராக புதிய அவதாரம் எடுத்து  இலங்கை எதிரான தொடரில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.இலங்கை எதிரான முதல் டி20 போட்டியில் தீபக் ஹூடா உடன் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதன்பின் 2-வது டி20 போட்டியில் இந்திய வீரர்கள் விரைவாக தங்களின் விக்கெட்டுகளை இழந்த நிலையில்,  7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட  65(31) ரன்களை அடித்து அரங்கை அதிர வைத்தார்.

இதற்கு முன்பு 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கி அணியின் முன்னனி வீரர்கள் ஜடேஜா 44 ரன்களையும் ,தினேஷ் கார்த்திக் 41 ரன்களையும் ,தோனி 38 ரன்களையும் பதிவு செய்திருந்தனர்.இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை அக்சர் பட்டேல் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல 2-வது டி20 போட்டியில் அக்சார் 20 பந்துகளில் அரைசதம் அடித்து,வேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் 5-வது இடத்தை பெற்றார்.இந்த பட்டியலில் முதல் இடத்தில் யுவராஜ் சிங் 12 பந்துகளில்  ,இரண்டாவது இடத்தில் ராகுல் ,சூர்யா குமார் யாதவ் 18 பந்துகளில் ,மூன்றாவது இடத்தில் கம்பீர்  19 பந்துகளில் இடம் பெற்றுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் அக்சர் பட்டேல் தன்னுடைய அசத்தல் பார்மை தொடர்ந்தால் அசைக்க முடியாத வீரராக வருங்காலத்தில் இருப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கருத்துகள் இடம்பெறுகின்றன.