இந்திய அணியில் தொடரும் திருமண நிகழ்வுகள்..! திருமண வாழ்வில் இணைந்தார் அக்சர் படேல்...!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தனது நீண்ட நாள் காதலி மேஹா படேலை வதோதராவில் வியாழக்கிழமை (26.01.2023) அன்று திருமணம் செய்தார். இந்திய அணியின் ரசிகர்கள் உட்பட பலர் இணையத்தில் புதுமண தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அணியின் இடது கை ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இலங்கைக்கு எதிரான தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்து ஓய்வில் இருந்த நிலையில் அந்த இடத்தில் களமிறங்கி அணிக்கு சிறப்பான முறையில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கி வந்தார்.
அதன்பின் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இருவரும் சில குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள காரணத்தால் விலகினார்கள்.
இந்நிலையில் கே.எல்.ராகுல் தனது நீண்ட நாள் காதலி ஆனா பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி திருமணம் செய்தார், அவரை தொடர்ந்து அக்சர் படேல் தனது காதலி மேஹா படேலை நேற்று திருமணம் செய்துள்ளார், இதனை அடுத்து இந்திய அணியின் வீரர்கள் உள்ளிட்ட பலரும் புதுமண தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் இணையத்தில் பதிவிட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.