இந்திய அணி உலக கோப்பை வெல்ல அஸ்வின் கொடுத்த ஐடியா..! ஏற்குமா பிசிசிஐ..??

இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது, இந்த முறை உலக கோப்பையை கண்டிப்பாக கைப்பற்றியே ஆகா வேண்டும் என்ற முடிவில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது.இது குறித்து ஒரு சுவாரசியமான கருத்து ஒன்றை இந்திய அணியின் சூழல் பந்து பவுலர் அஸ்வின் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையை முன்னால் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் கைப்பற்றியது, அதன்பின் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிகள் தங்கள் மண்ணில் நடந்த உலக கோப்பை தொடர்களை கைப்பற்றினார்கள் என்று அஸ்வின் கூறினார்.
இந்நிலையில் சொந்த மண்ணில் உலக கோப்பை தொடர் நடந்தால் அந்த நாட்டின் அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற பதிவுகள் நமக்கு தெரிகிறது, அதற்கு ஏற்றார் போல் இந்திய அணியும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய மண்ணில் நடந்த அனைத்து தொடர்களிலும் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது குறிப்பாக நடைபெற்ற 18 ஒருநாள் போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது என்று அஸ்வின் கூறினார்
இதனை அடுத்து தொடர்ந்து பேசிய அஸ்வின் இந்த வெற்றிகள் தனது சொந்த மண்ணில் இந்திய அணியின் சிறந்த பங்களிப்பை நமக்கு தெளிவாக காட்டுகிறது, ஆனால் இதில் நமக்கு ஒரு கவலையான தகவல் என்ன வென்றால் இந்தியாவில் நடந்த 18 ஒருநாள் போட்டிகளும் 14 இடங்களில் நடந்துள்ளது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் குறிப்பிட்ட மைதானங்கள் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இது இந்திய அணியை பொறுத்தவரை ஒரு கவலை அளிக்கும் விஷயம் தான், நீங்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளை எடுத்து கொண்டால் அங்கே போட்டிகள் குறிப்பிட்ட சில மைதானங்களில் தான் தொடர்ந்து நடைபெறும் இதனால் அவர்களுக்கு தங்கள் சொந்த மைதானங்கள் தன்மை முழுமையாக தெரியும். இந்த மாதிரி தன்மைகளை அறியாதது இந்திய அணியை பொறுத்த வரை இது ஒரு இழப்புத்தான்.
இதனால் இனி இந்திய மண்ணில் நடக்கும் ஒருநாள் போட்டிகளை குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் நடத்தினால் இந்திய அணியின் உலக கோப்பை தொடருக்கான பயணத்தில் மிகவும் உதவியாக இருக்கும், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பிற்கான சதவீதமும் அதிகரிக்கும் என்று அஸ்வின் தனது கருத்தை கூறியுள்ளார்.