IND VS AUS TEST 2023 : தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனைகள் படைக்க வாய்ப்பு..! ரசிகர்கள் நம்பிக்கை..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் முன்னணி ஸ்பின் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு புதிய மைல்கல்லை அடைய உள்ளார்.
இந்திய மண்ணில் நடைபெற உள்ள நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி விளையாட உள்ளது, அதாவது இந்த தொடரை 3-0 என்ற நிலையில் கைப்பற்றினால் தான் இந்திய அணி உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகும்.
இந்நிலையில் இந்திய மண்ணில் ஸ்பின் பவுலிங்கில் அசத்தி பல சாதனைகளை படைத்துள்ள அணியின் முன்னணி பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த தொடரில் புதிய சாதனை ஒன்றை அஸ்வின் படைக்க வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இதுவரை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை பெற்ற பெருமைக்குரிய வீரர் இந்திய அணியின் ஜாம்பவான் அணில் கும்ப்ளே தான், அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்களை பெற்று அசத்தியுள்ளார், அவரை அடுத்து இந்த பட்டியலில் ஹர்பஜன் சிங் 18 போட்டிகளில் 95 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த சிறப்பான பட்டியலில் இந்திய அணியின் அனுபவ வீரர் அஸ்வின் 18 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் சிறப்பாக விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஹர்பஜன் சிங் மற்றும் அணில் கும்ப்ளே சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை அஸ்வின் படைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த தொடரில் அஸ்வின் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், அணில் கும்ப்ளே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பேட்டிங்கில் 512 ரன்கள் பதிவு செய்து படைத்திருக்கும் மற்றொரு சாதனை ஒன்றை முறியடிக்க வாய்ப்புள்ளது, இந்திய அணி சுரப்பில் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அஸ்வின் 457 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற அஸ்வின் உடைய பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், எனவே அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு புதிய சாதனைகளை படைத்து அணியின் வெற்றியும் உறுதி செய்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.