IND VS AUS TEST 2023 : ஆஸ்திரேலிய அணியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்..!! காரணம் என்ன ..??

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக தொடரில் பங்கேற்க முடியாமல் ஓய்வில் உள்ள நிலையில், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சிலர் தற்போது தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், வேகப்பந்து பௌலர் ஹசில்வுட் ஆகிய இருவரும் காயம் காரணமாக தொடரில் மீதம் உள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளனர், மேலும் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக நாடு திரும்பியுள்ளார். அவர் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அணியில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில் உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற உள்ள உள்ளூர் போட்டிகளில் (ஷெஃபீல்ட் ஷீல்ட்) விளையாடுவதற்கு ஆஸ்டன் அகர் நாடு திரும்ப உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தொடரில் 2 தோல்விகளை அடைந்து மோசமான நிலையில் உள்ள நேரத்தில் முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து விலகி உள்ளது மேலும் அணிக்கு பலவீனத்தை அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறாமல் காயம் காரணமாக ஓய்வில் இருந்த மிச்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் 3வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மார்ச் 1 ஆம் தேதி 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் விளையாட உள்ள நிலையில், அதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் குறித்து தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.