பிக்பாஷ் லீக் 2022-2023 : பி.பி .எல் வரலாற்றில் ஆண்ட்ரூ டை படைத்த மோசமான சாதனை..!

ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடராக விளங்கும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதிய 52 வது போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முன்னணி பௌலர் ஆண்ட்ரூ டை பி.பி.எல் தொடர் வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சார்பாக பந்து வீசிய 36வயது அனுபவ வீரர் ஆண்ட்ரூ டை தான் பௌலிங் செய்த ஒரே ஓவரில் 31 ரன்கள் வழங்கி பிக்பாஷ் லீக் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பௌலர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிராக தனது கடைசி ஓவரை ஆண்ட்ரூ டை அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்க்கு வீசிய போது மூன்று சிக்ஸர்கள் உட்பட 30 ரன்கள் அடித்து அதிரடியை நிகழ்த்தினார்,இந்நிலையில் இந்த ஓவரில் எக்ஸ்ட்ரா ரன்கள் உட்பட 31 ரன்கள் வழங்கிய டை பி.பி.எல் தொடரில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர் ஆனார்.
இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி கேப்டன் பெரிதும் முயன்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியின் வெற்றி மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 22 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.