தோனி மற்றும் யூசுப் பதான் ஜோடியின் 13 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 04, 2023 & 15:23 [IST]

Share

இந்தியா வந்துள்ள இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது, இந்த போட்டியில் பல ஆண்டு காலமாக இருந்த தோனி மற்றும் யூசுப் பதான் ஜோடியின் சாதனை இளம் வீரர்களால் முறியடிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் டி-20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்தியா அணி வெற்றி பெற்று நல்லதொரு ஆரம்பமாக  அமைந்துள்ளது,மேலும் இந்த போட்டியில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாறிய நிலையில் அணியின் ஆல்ரவுண்டர்கள் ஆனா அக்சர் படேல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் இணைத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை எடுத்திருந்த பொழுது ஆறாவது விக்கெட்டில் இணைத்த இந்த ஜோடி 68 ரன்களை அடித்து அசத்தினார்கள்,குறிப்பாக ஹூடா 41*(23) ரன்களையும், அக்சர் 31*(20) ரன்களையும் அடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ஹூடா மற்றும் அக்சர் இருவரின் இந்த ரன் குவிப்பு அணிக்கு உதவியது மட்டுமல்லாமல் 13-ஆண்டு காலமாக இருந்த ஒரு சாதனையையும் முறியடித்துள்ளது.

அதாவது 2009-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆறாவது விக்கெட்டுக்கு  ஜோடி தோனி மற்றும் யூசப் பதான் இருவரும் 63 ரன்களை அடித்தனர் இதுவே டி-20 போட்டியில் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து  அதிக ரன்கள் அடிக்கப்பட்ட பட்டியலில்  2-வது இடத்தில் இருந்தது.

நேற்றைய  போட்டியில் ஹூடா மற்றும் அக்சர் ஜோடி அந்த சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்கள்.இந்த பட்டியலில் 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக  6-வது விக்கெட்டுக்கு கோலி மற்றும் ஹர்திக் ஜோடி இணைத்து 70-வது ரன்களை அடித்தது தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது