Representative Image.
அபுதாபி டி-10 லீகில் 20-வது போட்டியில் சென்னை பிரேவ்ஸ் மற்றும் டீம் அபுதாபி அணிகள் ஷேக் சயீத் மைதானத்தில் விளையாடினார்கள். இந்த போட்டியில் டோஸ் வென்ற சென்னை பிரேவ்ஸ் அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டீம் அபுதாபி அணியின் பௌலர் நவீன்-உல்-ஹக்கின் அசாத்திய பௌலிங் முதல் ஓவரிலேயே 3-விக்கெட்களை எடுத்து சென்னை பிரேவ்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார், அடுத்தாக வந்த வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தங்கள் விக்கெட்களை இழந்தனர். இதனால் சென்னை பிரேவ்ஸ் அணி 10-ஓவர்களில் வெறும் 71 ரன்களை மட்டுமே எடுத்தது.
இரண்டாவதாக பேட்டிங் செய்ய இறங்கிய டீம் அபுதாபி அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் உடனுக்குடன் தங்கள் விக்கெட்களை இழந்தனர். அடுத்தாக ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் மற்றும் பேபியன் ஆலன் பொறுப்புடன் விளையாடி அணியின் வெற்றிக்கு வழி செய்தனர்.
இதனால் 8.4 ஓவர்களில் 75 ரன்களை அடித்து டீம் அபுதாபி அணி வெற்றியடைந்தது. இந்த சிறப்பான வெற்றியின் மூலம் டீம் அபுதாபி அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. மாறாக சென்னை பிரேவ்ஸ் அணியின் புள்ளிப் பட்டியலில் மேலே வரும் முயற்சி சோகத்தில் முடிந்தது.