Abu Dhabi T10 League 2022 : காட்மோரின் சிறப்பான ஆட்டம்.. டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அசத்தல் வெற்றி!!
Abu Dhabi T10 League 2022 : கிரிக்கெட் விளையாட்டில் குறைந்த ஓவர் தொடர்களுக்கு உலகளவில் மிகவும் அதிக வரவேற்பு கிடைப்பதனால், பல குறைந்த ஓவர் தொடர்கள் உலக நாடுகளில் நடந்த வண்ணம் உள்ளன. அதில் ஒரு முக்கிய தொடராக அபுதாபி டி10 தொடரைச் சொல்லலாம்.
இந்த அபுதாபி டி-10 லீகின் ஆறாவது தொடர் ஷேக் சயீத் மைதானத்தில் நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி போட்டிகள் நடந்து வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கவுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் அணியும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் ஷேக் சயீத் மைதானத்தில் மோதினார்கள். முதலில் டாஸ் வென்ற டெல்லி புல்ஸ் அணியின் கேப்டன் ரிலீ ரோஸ்கோ ரோசோவ் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதனால் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை அடித்தனர். அதிகபட்சமாக இந்த அணியின் வீரர் டாம் கோஹ்லர்-காட்மோர் 82*(33) அடித்திருந்தார். டெல்லி புல்ஸ் அணி சார்பில் இமாத் வாசிம் மற்றும் மக்சூத் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பிறகு களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணி வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யாத காரணத்தால் தங்கள் விக்கெட்களை இழந்தனர். இறுதியில் 10 ஓவர்கள் முடிவில் 122/4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக டிம் டேவிட் 48(24) ரன்கள் அடித்திருந்தார். இதனால் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில் ஜோஷ் லிட்டில் 2 விக்கெட்களையும் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் டேவிட் வைஸ் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை டாம் கோஹ்லர்-காட்மோர் தட்டிச்சென்றார்.