அபுதாபி டி -10 லீக் : ஸ்டிர்லிங் அசத்தல் ஆட்டம் ..! நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் கலக்கல்..!

அபுதாபி டி -10 நேற்றைய லீக் ஆட்டத்தில் கீரன் பொல்லார்டு தலைமையில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மற்றும் மொயின் அலி தலைமையில் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியும் ஷேக் சயீத் மைதானத்தில் விளையாடினார்கள். மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியின் கேப்டன் மொயின் அலி டாஸ் வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்த போதிலும் 10-ஓவர்கள் முடிவில் 110 ரன்களை அடித்தது. குறிப்பாக ஆசம் கான் 21 பந்துகளில் 47 ரன்களை அடித்தார் அதில் 5 சிக்ஸர்களும் 4 பௌண்டரிகளும் அடங்கும், பால் ஸ்டிர்லிங் மேலும் 13 பந்துகளில் 34 ரன்களை அடித்தார். மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியின் சார்பில் பிரிட்டோரியஸ் கமற்றும் ரீம் ஜனத் 2-ஓவர்கள் வீசி தலா 3-விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பிறகு இரண்டாவதாக பேட்டிங் செய்ய இறங்கிய மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி வீரர்கள் எதிரணி வீரர்களின் பௌலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியாக 10 ஓவர்கள் முடிவில் 98 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தனர். அந்த அணியின் கேப்டன் மொயின் அலி 25 பந்துகளில் 42 ரன்களை அடித்தார், மேலும் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சார்பில் ரவி ராம்பால் 2 -விக்கெட்டுகளையும், பால் ஸ்டிர்லிங் 2- ஓவர்களில் 11 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த போட்டியில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் வெற்றிக்குச் சிறப்பாக பங்களித்த பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.