காயத்தால் வெளியேறும் ரோஹித் சர்மா.. தமிழக வீரர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?

Representative Image. Representative Image.

By Sekar Published: December 08, 2022 & 16:35 [IST]

Share

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இடது கட்டை விரலில் அடிபட்டதால், தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து அவர் விலகினார். மேலும் அறிக்கைகளின்படி, அவர் டிசம்பர் 14 ஆம் தேதி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் தொடங்கும் டெஸ்டில் இடம் பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.

அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், ரோஹித் சர்மாவின் இருப்பு குறித்த புதுப்பிப்பை வழங்க முடியவில்லை. ஆனால் அவர் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க இந்தியாவுக்குத் திரும்புவார் என்று மட்டும் டிராவிட் கூறினார். 

இந்நிலையில், தற்போதைய நிலைமையின்படி, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் கேஎல் ராகுல் அணியை வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் பெங்கால் மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கான அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அபிமன்யு ஈஸ்வரனுக்கு மிக விரைவாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அணியில் பல சீனியர் வீரர்கள் இருப்பதால், அவர் பிளேயிங் லெவெனில் இணைக்கப்படுவாரா என்பது கேள்விக்குறிதான். 

21 வயதான அபிமன்யு ஈஸ்வரன் உள்நாட்டு கிரிக்கெட்டில் தற்போது பெங்கால் அணிக்காக விளையாடி வந்தாலும், இவரது பூர்வீகம் தமிழகம் ஆகும். இவரது தந்தை ரங்கநாதன் பரமேஸ்வரன் ஈஸ்வரன் உத்தரகாண்டில் தொழில் நிமித்தமாக செட்டில் ஆகிவிட்டதால், அங்கே தனது ஆரம்ப கால கிரிக்கெட் பயிற்சியை தனது தந்தை நடத்திய அபிமன்யு கிரிக்கெட் அகாடெமியில் பெற்று, பின்னர் கொல்கத்தாவுக்கு சென்று, அங்கிருந்து பெங்கால் அணியில் இணைந்து கொண்டார்.