சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆரோன் பின்ச் ஓய்வு..! ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது..!

ஆஸ்திரேலியா அணியின் நீண்ட நாள் டி20 கேப்டனாக சிறப்பாக பணியாற்றிய ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார், தனது 12 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்தார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஆரோன் பின்ச் கடந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார், இதனை தொடர்ந்து தற்போது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு விடைகொடுத்தார்.
ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு முறை உலக கோப்பையை பெற்று தந்த கேப்டன் என்ற பெருமை ஆரோன் பின்ச் தான் சேரும்.
ஆஸ்திரேலிய அணிக்காக மெய்டன் டி20 உலக கோப்பை 2021 ஆம் ஆண்டு ஆரோன் பின்ச் பெற்று தந்தார், மேலும் 2015 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை பெற்று தந்த பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை 103 டி20 போட்டிகளில் விளையாடிய ஆரோன் பின்ச் 76 போட்டிகளில் கேப்டனாக அணியை வழி நடத்தி உள்ளார்.
தனது ஓய்வு குறித்து ஆரோன் பின்ச் கூறியது, 12 ஆண்டு காலமாக நான் எனது நாட்டிற்காக கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தது மிகவும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் தான் உள்ளது என்று கூறினார், மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை அணியில் நான் இருப்பது சந்தேகம் தான் எனவே இப்போது நான் ஓய்வு பெறுவது சரியானது என்று கூறினார்.
ஆரோன் பின்ச் தனது கிரிக்கெட் பயணத்தில் துணையாக இருந்த ரசிகர்கள் , பயிற்சியாளர்கள், சகா வீரர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் ஆரோன் பின்ச் தொடர்ந்து உள்நாட்டு தொடர்களில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்காக டி20 போட்டிகளில் 2 சதம் மற்றும் 19 அரைசதம் உட்பட 3120 ரன்கள் குவித்துள்ளார். இந்த டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆரோன் பின்ச் தான்.மேலும் 2018 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் அடித்து அசத்தினார், இது தான் அவரது அதிகபட்ச டி20 ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆஸ்திரேலியா அணியை வெற்றி கரமாக பல தருணங்களில் வழிநடத்தி பல வெற்றிகளையும் உலக கோப்பை களையும் பெற்று தந்த ஆரோன் பின்ச் உடைய பெயர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் என்றும் இடம் பெற்றிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆரோன் பின்ச் ஓய்வை அறிந்த ரசிகர்கள் உட்பட பலர் தங்களின் நன்றிகள் மற்றும் அடுத்த கட்ட பயணத்திற்கு வாழ்த்துக்கள் உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.