பிக்பாஷ் லீக் 2022-2023: சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி..! ஹாட்ரிக் தோல்வியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 30, 2022 & 16:27 [IST]

Share

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 21-வது போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும்  சிட்னி சிக்சர்ஸ் அணிகள் ஜீலாங்கில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் விளையாட உள்ளார்கள்.

இதில் டாஸ் வென்ற  மெல்போர்ன் ரெனிகேட்ஸ் கேப்டன் நிக் மேடின்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்,அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான மேடின்சன் டக் அவுட் ஆக மற்றொரு வீரரான மார்ட்டின் குப்டிலலும் 12 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் சற்று நிதானமாக விளையாடிய அனுபவ வீரர்கள்  ஷான் மார்ஷ் மற்றும் ஆரோன் பிஞ்ச் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

மேலும் அடுத்தது களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் தங்களின் விக்கெட் களை பறிகொடுத்தனர், இறுதியாக 20-ஓவர்கள் முடிவில்  மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 124 ரன்களை பதிவு செய்தது. சிட்னி சிக்சர்ஸ் அணி சார்பில் ஹேடன் கெர் மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 2-விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

அடுத்தாக 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் பிலிப் 2 ரன்களில் ஆட்டமிழக்க,அதன்பின் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய குர்டிஸ் பேட்டர்சன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகிய இருவரும் அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்கள்.

இறுதியாக அனுபவ வீரர் டேனியல் கிறிஸ்டியன் அதிரடியால் 17.5 ஓவர்களில் 126 ரன்களை அடித்து சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.மெல்போர்ன் ரெனிகேட்ஸ் சார்பில் அகேல் ஹொசின் 2-விக்கெட்களை சாய்த்தார்.

சிட்னி சிக்சர்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவிய கிறிஸ் ஜோர்டான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்சர்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.