பிக்பாஷ் லீக் 2022-2023: பேட்ரிக் டூலி சூழலில் சுருண்டது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்..! ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 19, 2022 & 18:50 [IST]

Share

ஆஸ்திரேலியாவின் முக்கிய உள்நாட்டுத் தொடர்களின் ஒன்றான பிக்பாஷ் லீக்கின் 12-சீசன் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 8-வது போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் லான்செஸ்டனில் உள்ள அரோரா மைதானத்தில் மோதினார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டன் மேத்யூ வேட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பென் மெக்டெர்மாட் முதல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் பொறுப்பாக விளையாடிய டி ஆர்சி ஷார்ட் மற்றும்  மேத்யூ வேட் அணியின் ஸ்கோரை ஏற்றிய பிறகு தங்கள் விக்கெட்களை இழந்தனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் சற்று அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 46*(28) ரன்களை அடித்தார்,எனவே  20-ஓவர்கள் முடிவில்  ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 172 ரன்களை பதிவு செய்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் மேத்யூ வேட்  29-பந்துகளில் 5-பௌண்டரிகள் மற்றும் 2-சிக்ஸர்கள் உட்பட 51 ரன்களை அடித்தார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சார்பாக ஜே ரிச்சர்ட்சன் 3-விக்கெட்களையும்,ஆண்ட்ரூ டை மற்றும் ஆரோன் ஹார்டி தலா 2-விக்கெட்களையும் சாய்த்தார்கள்.

 இந்நிலையில், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின்தொடக்க வீரர் பாஃப் டு பிளெசிஸ் சற்று அதிரடியான தொடக்கத்தைத் தந்து 32(16) ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க,அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 62(37) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20-ஓவர்கள் முடிவில் 8-ரன்கள் வித்தியாசத்தில்  ஹோபார்ட் ஹரிகேன்ஸ் வெற்றி பெற்றது.அணியின் வெற்றிக்காகச் சிறப்பாகப் பந்து வீசி 4-விக்கெட்களை எடுத்த பேட்ரிக் டூலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.