Happy Birthday PV Sindhu : பிவி சிந்துவின் டாப் பெர்பார்மன்ஸ்.. ஒரு ரவுண்ட் அப்!!
Happy Birthday PV Sindhu : இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய விளையாட்டுகளில் மிளிரும் பெயர். 2016 சீன ஓபனில் தனது முதல் சூப்பர் சீரிஸ் பட்டம் முதல் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை கொண்டுள்ள சிந்து இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதுவரை தனது பேட்மிண்டன் வாழ்க்கையில், சிந்து 2016 கோடைகால ஒலிம்பிக்கில் (ரியோ) வெள்ளி மற்றும் 2020 கோடைகால ஒலிம்பிக்கில் (டோக்கியோ) வெண்கலம் என தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
2019 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துடன் உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் எனும் சிறப்பையும் பெற்றுள்ளார். உலகெங்கிலும் உள்ள பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் தேசத்தை பெருமைப்படுத்தியதற்காக அர்ஜுனா விருது, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இன்று, அவரது 27வது பிறந்தநாளில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து சில உலகளாவிய போட்டிகளில் பி.வி.சிந்துவின் சில சிறப்பான செயல்பாடுகளை பார்ப்போம்.
2013ல் மலேசிய ஓபனில் தங்கம்
இந்தியாவின் பேட்மிண்டன் சூப்பர் ஸ்டாராக சிந்து நீண்ட தூரம் வந்துள்ளார். 2013 மலேசிய ஓபனில் தனது முதல் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்ற பிறகு அவர் தான் ஒரு ப்ரோ ஷட்லர் என நிலைநாட்டினார்.
2013, 2014 மற்றும் 2015ல் மக்காவ் ஓபனில் தங்கம்
பிவி சிந்துவுக்கு மக்காவ் மிகவும் பிடித்தமான இடம். 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மக்காவ் ஓபனில் தங்கம் வென்று தனக்குப் பிடித்த இடத்தில் ஹாட்ரிக் பட்டங்களைப் பதிவு செய்தார்.
இந்திய ஓபன் 2017ல் தங்கம்
ரியோ ஒலிம்பிக்கில் கரோலினா மரினிடம் தோல்வியுற்ற சிந்து, 2017ல் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், கரோலினா மரினிடம் பெற்ற தோல்விக்கு பழிவாங்கினார். வெற்றிகரமான ஓட்டத்தின் போது தனது சக இந்திய வீராங்கனையான சாய்னா நேவாலை காலிறுதியில் தோற்கடித்ததும் குறிப்பிடத்தக்கது.
2018 குவாங்சோ உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டியில் தங்கம்
அகானே யமகுச்சி, ஜாங் பெய்வென் மற்றும் டாய் சூ யிங்கைத் தோற்கடித்தது முதல் அரையிறுதியில் ரட்சனோக் இன்டனானை வீழ்த்தியது வரை, சிந்து 2018 குவாங்சோ உலக டூர் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில், அவர் நோசோமி ஒகுஹாராவை 21–19, 21–17 என்ற கணக்கில் வீழ்த்தி உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டியை வென்றார்.
சீனா ஓபன் சூப்பர் சீரிஸ் 2016 இல் தங்கம்
சீனா ஓபன் 2016 பட்டத்துடன், 2014 இல் சாய்னா நேவாலுக்குப் பிறகு இதை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சிந்து. ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிந்தைய போட்டிகளில் சில கடினமான கட்டங்களைத் தாங்கிய பிறகு, அவர் இந்த சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.